இதற்கிடையே, தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதிநடைபெற உள்ளது. எனவே, தேர்தலுக்கு முன்பாக பள்ளி தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசு முடிவு செய்தது.
இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 4 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெறவிருந்த அறிவியல் தேர்வு ஏப்ரல் 22 ஆம் தேதிக்கும், ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறவிருந்த சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 23 ஆம் தேதிக்கு மாற்றம் செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.