வெறிச்சோடி உள்ள பேருந்து நிலையங்கள்.. தொமுச, ஐஎன்டியுசி தொழிலாளர்கள் மட்டும் வேலை..!

Siva

செவ்வாய், 9 ஜனவரி 2024 (07:31 IST)
தமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருவதை அடுத்து  நள்ளிரவு 12 மணி முதல் பெரும்பாலான பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளன.  

சென்னை உள்பட தமிழ்நாடு முழுக்க இன்று போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக பல ஊர்களில் இருந்து பேருந்துகள் கிளம்பவில்லை. மாநிலம் முழுவதும் மிக குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தொழிற்சங்க போராட்டத்தில் தொமுச, ஐஎன்டியுசி தொழிற்சங்கங்கள் மட்டும் பங்கேற்கவில்லை என்பதால் அதில் உள்ள தொழிலாளர்கள் மட்டும் பேருந்துகளை இயக்குகின்றனர். ஆனால் பயணிகளுக்கு தேவையான பேருந்துகள் இல்லை என்று பயணிகள் கூறி வருகின்றனர்,

சென்னை உள்பட தமிழகத்தின் பல பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி கிடப்பதாகவும் இயல்பு நிலை திரும்பும் வரை பொதுமக்கள் தங்கள் பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் பொங்கல் நேரத்தில் சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்ல உள்ள நிலையில் அதற்குள் இந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்