தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை கொண்டு பேருந்துகளை இயக்க தீவிரம்!

Sinoj

திங்கள், 8 ஜனவரி 2024 (19:14 IST)
இன்றைய முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி நாளை வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கள் அறிவித்துள்ள நிலையில், இதற்கு அரசு மாற்று ஏற்பாடு செய்து வருகிறது.

பழைய ஓய்வூதிய திட்டம்,  15வது ஊதிய ஒப்பந்ததை இறுதி செய்வது உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இருமுறை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து,  இன்று அரசுடன் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தின. இதில், 6 கோரிக்கைகளில் 2 மட்டும் ஏற்கப்பட்டதால் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

எனவே நாளை 100 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படாது என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால்  நாளை பயணம்  மேற்கொள்ளும் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், நாளை பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கு எந்தவித சிரமங்களும் இருக்க கூடாது என்ற நோக்கில் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைஒ நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், திருச்செந்தூர் அரசு போக்குவரத்து பணிமனையில் தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை நியமித்து நாளை திட்டமிட்டபடி பேருந்துகளை இயக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்