தனியாக இருந்த பெண் வழக்கறிஞரை குத்தி கொன்ற கொடூரம்!

வியாழன், 3 நவம்பர் 2016 (13:24 IST)
சென்னை மேற்கு மாம்பலம் குமரன் நகர், முத்தாரம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் லட்சுமி சுதா (58). இவர், கடந்த 30 ஆண்டுகளாக தனது கணவரைப் பிரிந்து தனியாகவே வசித்து வந்துள்ளார்.
 

 
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த லட்சுமி சுதா, கடந்த 5 ஆண்டுகளாக வேலைக்கு பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இவரது மகன் கார்த்திக் திருமணமாகி பெங்களூருவில் வசித்து வருகிறார்.
 
இந்நிலையில், நேற்று புதன்கிழமை மாலை 5 மணியளவில் லட்சுமி சுதாவின் சகோதரி வித்யா அருள்மணி அவரை பார்ப்பதற்காக வந்தார். வெகுநேரமாக கதவை திறந்தும் திறக்காததால், சந்தேகமடைந்த வித்யா மூடியிருந்த கதவை தள்ளிய போது திறந்து கொண்டது.
 
உள்ளே சென்று பார்த்தபோது, லட்சுமி சுதா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து, முதுகுப்பகுதி, இடுப்பு என பல இடங்களில் கத்தியால் குத்தியதற்கான காயங்கள் இருந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வித்யா கதறியழுதார்.
 
இது குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்ப நாய் வரவழைத்து ஓட விட்டனர். ஆனால், யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்