முன்னாள் அமைச்சர் மீது பெண் தொழிலதிபர் கொலைமிரட்டல் புகார்

புதன், 3 நவம்பர் 2021 (18:37 IST)
முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் மீது கொலைமிரட்டல் விடுப்பதாக ஒரு பெண் தொழிலதிபர் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார்.

ரூ.14 கோடி மோசடி செய்துவிட்டு  முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாக கேரளாவைச் சேர்ந்த பெண் தொழிலதிபர்  நெல்லை சரக டிஜிபியிடன் இன்று புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்கள் பெண் தொழிலதிபர் கூறியுள்ளதாவது: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவரது மனைவியும் என்னிடமிருந்து ரூ.14 கோடி பணம், நகைகள் பெற்றுக்கொண்டு அதைக் திருப்பித்தரவில்லை ;அவர்கள் மீது கேரளாவில் வழக்குப் பதிவு செய்து அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்