பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் வழுக்கி விழுந்து உயிரிழப்பு? - அதிர்ச்சியில் வாசகர்கள்!

Prasanth Karthick

ஞாயிறு, 10 நவம்பர் 2024 (13:22 IST)

தமிழ் இலக்கிய உலகில் பிரபலமான எழுத்தாளராக அறியப்படும் இந்திரா சௌந்தர்ராஜனின் திடீர் மரணம் இலக்கிய உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

1980கள் முதலாக தமிழில் த்ரில்லர் வகை கதை சொல்லலில் முன்னணியில் உள்ள எழுத்தாளர்களில் முக்கியமானவர் இந்திரா சௌந்தர்ராஜன். வரலாறு, புராண, இதிகாசங்களை அடிப்படையாக கொண்டு இவர் எழுதிய த்ரில்லர் கதைகளுக்கு இன்றும் ஏராளமானோர் ரசிகர்களாக உள்ளனர்.

 

இவர் எழுதிய விட்டுவிடு கருப்பா, ரங்க ராஜ்யம், ருத்ர வீணை, கோடைக்கால கொலைகள், இறையுதிர் காடு போன்ற நாவல்கள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவை. இதில் விட்டுவிடு கருப்பா நாவல் ‘விடாது கருப்பு’ என்ற பெயரிலும், ருத்ர வீணை, என் பெயர் ரங்கநாயகி உள்ளிட்டவை தொலைக்காட்சி தொடர்களாக வெளிவந்து மிகவும் பிரபலமானவை.
 

ALSO READ: ஆந்திராவில் கடல் வழி விமான சேவை: வெள்ளோட்டம் நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு..!
 

கடந்த 40 ஆண்டு காலமாக மதுரையில் வாழ்ந்து வரும் இந்திரா சௌந்தர்ராஜன் தற்போது வரை தொடர்ந்து எழுதி வந்தார். இந்நிலையில் தற்போது அவர் மதுரையில் உள்ள தனது வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார். தமிழ் இலக்கிய உலகில் முக்கிய ஆளுமையாக விளங்கிய இந்திரா சௌந்தர்ராஜனின் மரண செய்தி பல வாசகர்களையும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்