வசூர் ராஜா மீது 15 வழக்குகளில் வாரண்ட் உள்ள நிலையில், கொலை, கொள்ளை, ஆட் கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், எஸ்பி தலைமையிலான தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் சொகுசு காரில் வந்த ரெளடிக் கும்பல், 50 ரூபாய் கட்டணம் செலுத்த மறுத்து, அங்குப் பணியில் இருந்த ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நட்த்தியது. இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடிகளில் வசூர் ராஜாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.