இந்த வழக்கு விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பில் மனுதாரருக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு தேவையான கல்வி மற்றும் அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்ய வேண்டும் என்றும் அந்த குழந்தை 21 வயது நிறைவடையும் வரை ஆண்டுக்கு ரூபாய் 1.20 லட்சம் அதாவது மாதம் 10 ஆயிரம் அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.