ஜாமீனில் வந்த ரஞ்சனா நாச்சியாரை ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்..!

ஞாயிறு, 5 நவம்பர் 2023 (11:36 IST)
அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்ததை கண்டித்த ரஞ்சனா நாச்சியார் மாணவர்களை அடித்ததாகவும் குற்றம் காட்டப்பட்டது. அதுமட்டுமின்றி கண்டக்டர் மற்றும் டிரைவரை அவதூறாக பேசியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அந்த புகாரின் அடிப்படையில் நேற்று காலை ரஞ்சனா கைது செய்யப்பட்டார்.

ஆனால் அவர் மாலையை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜாமீனியன் விடுதலை பெற்று ரஞ்சனா நாச்சியார் தனது இல்லத்திற்கு வந்த போது அந்த பகுதியில் இருந்த பெண்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது நான் செய்த முறை வேண்டுமானால் தவறாக இருக்கலாம், ஆனால் நான் செய்த நோக்கம் நல்லது தான். பேருந்தில் பயணம் செய்த அந்த குழந்தைகளை, என்னுடைய குழந்தைகள் என நினைத்துதான் கண்டித்தேன். அந்த இடத்தில் அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் இருந்தாலும் அதையேதான் செய்திருப்பார்கள்’ என்று தெரிவித்தார்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்