ரூ.1.5 கோடி திருடு போனதாக பொய் புகார்..! மாஜி பா.ஜ.க நிர்வாகி மீது நடவடிக்கை..!!

Senthil Velan

திங்கள், 20 மே 2024 (13:52 IST)
ரூ.1.5 கோடி திருடு போனதாக திருட்டு போனதாக பொய் புகாரளித்த முன்னாள் பாஜக நிர்வாகி விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
 
அன்னூர் அருகே சொக்கம்பாளையம் திருமுருகன்நகரில், தோட்டத்தில் வசிப்பவர் விஜயகுமார். பாஜக முன்னாள் நிர்வாகியான இவரது வீட்டில் நேற்று முன்தினம் (மே 18) மர்ம நபர்கள், கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ.1.50 கோடி ரூபாய், ஒன்பது பவுன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளை அடித்துச் சென்றதாக அன்னூர் காவல் நிலையத்தில் விஜயகுமார் புகார் அளித்தார்.
 
கொள்ளையர்களை கண்டுப்பிடிக்க மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., பாலாஜி தலைமையில், 10 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டனர். இந்நிலையில் வீட்டில் நகை, பணத்தை திருடியவரை 24 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

ALSO READ: நடிகர்களுக்கு கொக்கேன் கொடுத்தது யார்.? நடிகர் நடிகைகள் உடல் பரிசோதனை செய்க..! வீரலட்சுமி..!!

வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது ரூ.18.5 லட்சம் மட்டுமே ரூ.1.5 கோடி இல்லை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக பொய்யான தகவல் கொடுத்ததாக புகார்தாரர் விஜயக்குமார் மீது  சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்