பெட்ரோல் டேங்க் மேல் காதலி.. கட்டியணைத்து பைக் ஓட்டிய வாலிபருக்கு அபராதம்..!

Siva

செவ்வாய், 14 மே 2024 (13:45 IST)
பெட்ரோல் டேங்க் மீது காதலியை உட்கார வைத்து அவரை கட்டி அணைத்தபடி பைக் ஓட்டிய வாலிபருக்கு காவல்துறையினர் 500 ரூபாய் அபராதம் விதித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில வருடங்களாகவே டூவீலரில் செல்லும் காதலர்கள் எல்லை மீறி செல்வதாகவும் டூவீலரில் சென்று கொண்டிருக்கும்போதே அவர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவதாகவும் பல புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. 
 
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் வாலிபர் தனது காதலியை பெட்ரோல் டேங்க் மீது உட்கார வைத்துக்கொண்டு அவரை கட்டி அணைத்தபடியே பைக்கை ஓட்டிக்கொண்டிருந்தார். இது குறித்து புகார் காவல்துறைக்கு சென்ற நிலையில் காவல்துறையினர் உடனடியாக அந்த பைக்கை வழிமறித்து பெட்ரோல் டேங்க் மேல் காதலியை அமர வைத்து கட்டியணைத்து சென்ற இளைஞர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
 
மேலும் இதுபோல் மீண்டும் செய்யக்கூடாது என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன. பைக்கில் செல்லும்போது பெட்ரோல் டேங்க் மீது யாரையும் அமர வைக்க கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்