அதிர்ச்சி! மகளிர் குழுக்கு வழங்கப்பட்ட கடன் பணத்தில் கள்ள நோட்டுகள்

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2016 (16:18 IST)
தேனி அருகே தனியார் நிதி நிறுவனம் மூலம் மகளிர் குழுக்களுக்கு வழங்கிய கடன் தொகையில், கள்ள ரூபாய் நோட்டுகள் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 

 
தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் ஸ்மைல் மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனம் மூலம் தேனி, பொம்மைய கவுண்டன்பட்டி, பள்ளி ஓடைத்தெருவைச் சேர்ந்தமலைச்சாமி மனைவி ரேகா என்பவரால் ஒருங்கிணைக்கப்பட்ட 18 மகளிர் குழுக்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதமும், 4 மகளிர் குழுக்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதமும் கடன் தொகை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இதில், 12 குழுக்களின் பெயரில் வழங்கப்பட்ட கடன் தொகையில், ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 64 கள்ள நோட்டுகள் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் மகளிர் குழு உறுப்பினர்களுடன் வந்து ரேகா புகார் அளித்தார்.
 
இந்த புகாரின் அடிப்படையில், நிதி நிறுவன மேலாளர் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்லச்சாமி என்பவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்