10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: விடைத்தாள்களை 8 நாட்களுக்கு திருத்தி முடிக்க உத்தரவு..!

Siva

ஞாயிறு, 10 மார்ச் 2024 (11:01 IST)
தமிழகத்தில் ஏற்கனவே 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடந்து வரும் நிலையில் வரும் 26 ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொது தேர்வு தொடங்குகிறது என்பதும் இந்த தேர்வுக்கு தயாராக மாணவர்கள் இரவு பகல் பாராமல் படித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு முடிந்தவுடன் அந்த விடைத்தாள்களை 8 நாட்களுக்குள் திருத்தி முடிக்க வேண்டும் என தேர்வு துறை உத்தரவு தரப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகளை ஏப்ரல் பணி 3ஆம் தேதி தொடங்க வேண்டும் என்றும் ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் முழுமையாக முடிந்து விட வேண்டும் என்றும் அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வு துறை சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாக தகவல் வழியாக உள்ளது. 
 
ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் அனைத்து விடைத்தாள்களும் திருத்தும் பணிகளை முடித்தால் தான் ஏப்ரல் இறுதி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் ரிசல்ட் அறிவிக்கப்படும் என்றும் அதன் பிறகு மாணவர்கள் அடுத்த கட்ட படிப்புகளுக்கு செல்ல வசதியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது 
 
எனவே இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள்கள் ஒரே வாரத்தில் திருத்தி முடிக்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்