மகளிர் தினத்தில் தான் தாய் கஷ்டப்பட்டு தன்னை வளர்த்ததாக புகழாரம் சூட்டிய- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

J.Durai
சனி, 9 மார்ச் 2024 (14:59 IST)
சென்னை ராயபுரம் ஆட்டுத்தொட்டி பகுதியில் அதிமுக மகளிர் அணி சார்பாக  மகளிர் அணி செயலாளர் ராயபுரம் பகுதி கிழக்கு வழக்கறிஞர் பி. ஜெயக்குமாரி விசு ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது
 
இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் 
 
இதில் அதிமுகவினர் பெரும்பாலனோர் கலந்து கொண்டனர்.
 
இந்நிகழ்வில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தன் தந்தை கவுன்சிலராக நேர்மையாக இருந்தார் இதனால் சம்பாத்தியம் குறைவாக இருந்தது மக்கள் பணியில் மும்முரம் காட்டியதால் எனது தாய் சிறு வயது முதல் மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, ஆகிய பகுதிகளில் காலை 7 மணிக்கு கிளம்பி சென்று அரிசி வாங்கி வந்து காசிமேடு பகுதியில் விற்பனை செய்வார் அதைத்தொடர்ந்து புள்ளம்பாடி சென்று புடவைகள் வாங்கி வந்து வியாபாரம் செய்து வந்தார் மேலும் 1968 ஆம் ஆண்டு 25 ஆயிரம் ரூபாய் சீட்டு பிடித்தார் இந்நிலையில் என்னை டான் போஸ்கோ பள்ளியில் ஒரு சவரன் 120 ரூபாய் இதுபோல் 4 மாதத்திற்கு 4 சவரன் தொகை அளவுக்கு எனக்கு பள்ளிக்கு பீஸ் கட்டி படிக்க வைத்தார்
 
இதனால் இன்று நான் அமைச்சராக வந்து பொதுமக்களுக்கு நன்மை செய்து வருகிறேன் இதற்கு எல்லாம் மகளிர் தினத்தில் என் தாயாருக்கு புகழாரம் சூட்டி ஜெயக்குமார் மேடையில் பேசினார்
 
மேலும் அனைத்து பெண்களுக்கும் பூங்கொத்து கொடுத்தார் ஜெயக்குமாரை பெண்கள் ஆர்வாரத்துடன் வரவேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்