எம்.ஜி.ஆர் நினைவிடத்துக்குப் பக்கத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடம் என்பதை பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா செல்வி ஜெ ஜெயலலிதா நினைவிடம் என்று பெயர் மாற்ற வேண்டும் என நேற்று கூடிய தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் ஜெயலலிதாவுக்கு, பாரத ரத்னா விருது வழங்கவும் மத்திய அரசிடம் பரிந்துரைக்க உள்ளது அமைச்சரவை. நாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு வெண்கல சிலை அமைக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தவிர, ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 15 கோடி ரூபாயில் நினைவு மண்டபம் அமைக்கவும், ஜெயலலிதாவின் உருவப்படத்தை தமிழக சட்டப்பேரவையில் வைக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.