
உலகம் முழுவதும் ஏஐ ஆட்டோமேஷன் காரணமாக ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் நடந்து வரும் நிலையில் மெட்டா நிறுவனம் மேலும் பல பணியாளர்களை நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்தால் உலகம் முழுவதும் பல துறைகளில் ஆட்டோமேஷன் செயல்பாடுகள் தொடங்கியுள்ளன. பல்வேறு தொழில்நுட்ப வேலைகளை ஏஐகளே செய்து முடித்து விடும் நிலையில் அந்த வேலைகளை செய்துக் கொண்டிருந்த பணியாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த ஏஐயின் தாக்கம் மற்ற துறைகளை விட ஐடி துறையை பெரிதும் பாதித்துள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில் அதன் தொடர்ச்சியாக மெட்டா தனது அடுத்தக்கட்ட பணி நீக்கத்தை மேற்கொள்ள உள்ளது.
முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏஐ மேம்பாட்டு பிரிவில் 50 புதியவர்களை பணியமர்த்திய மெட்டா நிறுவனம், இந்த ஆண்டு முடிவில் 600 ஊழியர்களை நீக்கம் செய்ய உள்ளதாக ஏஐ பிரிவு தலைமை அதிகாரி வாங் தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K