பின்னர் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் விடுமுறை தினமாக இருந்ததால், 13ஆம் தேதி ஆறு பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். பொங்கல் பண்டிகைக்காக மூன்று நாட்கள் தொடர் விடுமுறை இருந்ததால், இன்றுதான் வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை எந்த அரசியல் கட்சியின் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இன்று திமுக வேட்பாளர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளிட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.