அதிமுக துணைப் பொதுச்செயலாளரக தினகரனை நியமித்தது செல்லாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தினகரனுக்கும், எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அணியின் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தினகரனை மீண்டும் கட்சியில் சேர்த்து அவரை துணைப் பொதுச்செயலாளராக நியமித்தது சட்ட விரோதம்....
எனவே, தினகரன் அறிவித்த அறிவித்த நியமண பட்டியல் கட்சியின் விதிப்படி செல்லாது. அதை தொண்டர்கள் நிராகரிக்க வேண்டும்..
ஜெயலலிதா அளித்த கடிதத்தில் தினகரன் பெயர் இல்லை எனக்கூறி தேர்தல் ஆணையம் ஏற்கனவே நிராகரித்தது.
5 ஆண்டுகள் உறுப்பினராக இல்லாததால், தினகரனால் துணைப் பொதுச்செயலாளாரக நீடிக்க முடியாது.
ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளே தற்போது கட்சி மற்றும் ஆட்சியே வழி நடத்துகிறார்கள்.
என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட 27 பேர் கையெழுத்து இட்டுள்ளனர். அதே சமயம், சசிகலாவால் நியமிக்கப்பட்ட செங்கோட்டையன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் மட்டும் இந்த தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.