ஊட்டி, கொடைக்கானலுக்கான இ-பாஸ் நீட்டிப்பு.. எந்த மாதம் வரை?

Mahendran

வெள்ளி, 28 ஜூன் 2024 (16:42 IST)
ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இபாஸ் அவசியம் என்ற கட்டுப்பாடு கடந்த சில வாரங்களுக்கு முன் கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது இந்த கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த முறை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீடிப்பு என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஊட்டி கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி, பெங்களூர் ஐஐஎம் ஆகிய நிறுவனங்கள் ஆய்வு செய்து வருவதாக அரசு தரப்பில் இந்த வழக்கின் விசாரணையின் போது விளக்கம் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
முன்னதாக  நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை மே 7ஆம் முதல் அமல்படுத்தபட்டுள்ளது. பேருந்துகளில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் இ_பாஸ் நடைமுறை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்