எவ்வளவு சுற்றுலா பயணிகள் வேண்டுமானாலும் நீலகிரிக்கு வரலாம்: சிவ்தாஸ் மீனா

Siva

வெள்ளி, 10 மே 2024 (14:34 IST)
எவ்வளவு சுற்றுலா பயணிகள் வேண்டுமானாலும் நீலகிரிக்கு வரலாம் எனவும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் உடனடியாக இ-பாஸ் கிடைத்துவிடும் எனவும், எனவே வியாபாரிகள் அச்சப்படத் தேவையில்லை எனவும் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா பேட்டி அளித்துள்ளார்.
 
இ-பாஸ் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்ட தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அதன்பின் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.
 
மே 7ஆம் தேதிக்கு பிறகு ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்பவர்கள் இ.பாஸ் எடுக்க வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவு பிறப்பித்ததன் அடிப்படையில் தற்போது இபாஸ் நடைமுறை  அமலில் உள்ளது. 
 
வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் அல்லது ஊட்டி  அல்லது கொடைக்கானல் செல்லும் வழியில் கூட ஆன்லைனில் இபாஸ் எடுத்துக் கொள்ளலாம் என்றும் அதற்கான பிரத்யேகமான இணையதளம் உருவாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் இபாஸ் நடைமுறையை அமல்படுத்த கூடாது என்றும் அதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் கூறிய நிலையில் இது குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா விளக்கம் அளித்துள்ளார். 
 
இபாஸ் நடைமுறையில் எந்த சிக்கலும் இருக்காது என்றும் எத்தனை பேர் இபாஸ் விண்ணப்பம் செய்தாலும் அவர்களுக்கு கிடைத்துவிடும் என்றும் எனவே வியாபாரிகள் கவலை கொள்ள தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்