பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடப்பது உறுதி- அமைச்சர்
திங்கள், 28 டிசம்பர் 2020 (16:37 IST)
நடப்பாண்டு கல்வியில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடப்பது உறுதி என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
முதல்வர் பழனிசாமியுடன் கலந்துபேசி பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், இவ்வாண்டில் பாடத்திட்டம் குறைக்கப்பட்டிருந்தாலும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும். இக்கல்வியாண்டு பூஜ்ஜியமாக இருக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனால் மாணவர்கள் பள்ளித் தேர்வுகளுக்குத் தயாராகுமாறு அவர் தெரிவித்துள்ளார்.