பொறியியல் படிப்புக்கு குவிந்தது விண்ணப்பங்கள்: கலந்தாய்வு எப்போது?

Mahendran

வெள்ளி, 7 ஜூன் 2024 (16:00 IST)
கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிக்க மாணவர்கள் ஆர்வமில்லாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு பொறியல் படிப்புக்கு சுமார் இரண்டரை லட்சம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
பொறியியல் படிப்பில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 6ஆம் தேதி தொடங்கிய நிலையில் முதல் நாளில் இருந்தே மாணவ மாணவிகள் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர் என்றும் இதுவரை சுமார் இரண்டரை லட்சம் மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர் என்றும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் இதில் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்துள்ளனர் என்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஜூன் 12-ம் தேதி அட்டகாசம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
 
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தரவரிசை பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரியுதுள்ளது. 
 
மேலும் கலந்தாய்வு குறித்த சரியான தேதி குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்