இந்நிலையில் இன்று காலை, 11 மணிக்கு கல்லூரி வகுப்பில் பீரித்தி ரோஜா மயங்கி விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த பேராசிரியர்கள், பீரித்தி ரோஜாவை அருகில் உள்ள அறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்தனர்.
பிறகு, மருத்துவமனைக்கு பீரித்தி ரோஜாவை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்தை கொண்டு வர பேராசிரியர்கள் சென்றனர். பிறகு, திரும்பி சென்று பார்த்த போது, பீரித்தி ரோஜா அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
தகவல் அறிந்த போலீசார், பீரித்தி ரோஜா உடலை கைப்பற்றி, கரூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை செய்வதற்கு முன், பீரித்தி ரோஜா எழுதிய கடிதத்தில், உடல்நிலை சரியில்லாததால், தற்கொலை செய்து கொள் வதாக இருந்தது என, பசுபதிபாளையம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை கல்லூரி நிர்வாகத்தினர் வீடியோ எடுக்க கூடாது என்று உத்திரவிட்டதோடு, மீறி எடுத்தால் அடியாட்களை வைத்து அடிப்போம், என்றும் தெரியவந்துள்ளது.