பொறியியல் கல்லூரி கலந்தாய்வு: முதல் சுற்றில் நிரம்பிய இடங்கள் எத்தனை?

திங்கள், 26 செப்டம்பர் 2022 (08:10 IST)
பொறியியல் கல்லூரிக்கான முதல் சுற்றில் கலந்தாய்வு முடிவு பெற்ற நிலையில் இதுவரை 9,594 இடங்கள் நிரம்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
செப்டம்பர் 10ஆம் தேதி பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது என்பது மொத்தம் 4 சுற்றுகளாக நடைபெற உள்ள இந்த கலந்தாய்வு முதல் சுற்றில் நேற்றுடன் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
முதல் சுற்று கலந்தாய்வில் 11,893 மாணவர்கள் விருப்ப இடங்களை தேர்வு செய்து இருந்த நிலையில் அவர்களில் 12,,996 மாணவர்கள் தற்காலிக இட ஒதுக்கீடு ஆணை பெற்றுள்ளனர். இவர்களில்  5887 பேர் கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழகம் முழுவதும் 444 பொறியியல் கல்லூரிகளில் 9,594 மாணவ மாணவிகள் தங்களுக்கு விருப்பமான படிப்புகளை தேர்வு செய்திருப்பதாகவும் முதல் சுற்றில் 446 இன்ஜினியரிங் கல்லூரிகளில் 269 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளன
 
இந்த நிலையில் 2-வது சுற்று கலந்தாய்வு நேற்று தொடங்கி இருப்பதாகவும் இதில் சுமார் 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்