கருப்பு பணத்தை ஒழிக்கிறோம் என கடுகு டப்பா காசை பிடுங்கலாமா - உணர்ச்சிகர பாடல் (வீடியோ)

வியாழன், 10 நவம்பர் 2016 (12:53 IST)
பழைய 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். அதேபோல், புதிய 100, 500, 2000 நோட்டுகள் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. பொதுமக்கள், பழைய நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளாலம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 

 
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு, ஒருபக்கம் வரவேற்பும், ஒருபக்கம் எதிர்ப்பும் வலுத்து வருகிறது. 
 
இந்நிலையில், இந்த திட்டம் ஏழை மக்களை துன்பத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது என்ற கோணத்தில் ஒரு உணர்ச்சிகர பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
 
அந்த வீடியோ பாடல் உங்கள் பார்வைக்கு....
 

 
நன்றி - நக்கீரன்

வெப்துனியாவைப் படிக்கவும்