தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி: இன்று முடிவாகிறது!

புதன், 24 பிப்ரவரி 2021 (06:57 IST)
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி இன்று முடிவாகும் என்று செய்திகள் வெளியானதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் தேதியை இன்று முடிவு செய்ய இருப்பதாக தலைமை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் டெல்லியில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக்கு பின்னர் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
தமிழகத்தை பொறுத்தவரை ஒரே கட்டமாக தேர்தல் நடத்த அனைத்து அரசியல் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் நான்காவது வாரம் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால் உடனே தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால் அதன் பின்னர் எந்தவிதமான அதிரடி அறிவிப்புகளையும் அரசு வெளியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தேர்தல் தேதி முடிவாகிய பின்னர் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும் சுறுசுறுப்பாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்