அனைவரும் ஏற்கனவே எதிர்பார்த்தது போல தேர்தல் ஆணையம் அ தி மு க கட்சியையும், சின்னத்தையும், முடக்கி இருக்கிறது. வலுவான வாதங்கள் இரு தரப்பில் முன் வைக்கப்பட்டாலும் ஒ பி எஸ் அணிக்கு ஆதரவாகவே தேர்தல் ஆணையம் செயல்பட்டு உள்ளது. ஒ பி எஸ் நோக்கம் தனக்கு இரட்டை இலை, இல்லை என்றாலும் பரவாயில்லை அது தினகரனுக்கு கிடைக்கக் கூடாது என்ற நல்ல எண்ணம் நிறைவேறி இருக்கிறது. கடந்த சில நாட்களாக உற்சாகமாக பேசி வந்த தினகரனுக்கு இது நிச்சயம் பின்னடைவு தான். ஆனால் நான் தான் இப்போதும் வேட்பாளர் என்று தினகரன் பேசுவது இன்னும் அவர் முழுமையாக நம்பிக்கை இழக்கவில்லை என்பதை காட்டுகிறது.
ஒரு நடுநிலையாளனாக கேட்கிறேன் ! ஒ பி எஸ் அணிக்கு இரட்டை விளக்கு ஒதுக்கிய தேர்தல் ஆணையம் தினகரனுக்கு ஏன் இரட்டை மலர் சின்னத்தை ஒதுக்கவில்லை ? எல்லாம் மோடி கணக்கு ! யார் சொல்ல ஆணையம் ஆடுகிறது என தெரிய வில்லை ? ஆனால் களத்தில் சற்று உற்சாகமாய் இருக்கிறது தி மு க. இந்த தடைகளை எல்லாம் தாண்டி தினகரன் வெல்வாரே ஆனால், அடுத்து வரும் அ தி மு க காலம், தினகரன் காலமே