தமிழகத்தில் 987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்: என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (07:40 IST)
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி தாக்கப்பட்டதை கண்டித்து நேற்று முன்தினம் திடீரென தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இதனையடுத்து நேற்று சுமார் ஆயிரம் பள்ளிகள் தன்னிச்சையாக விடுமுறை அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில் தன்னிச்சையாக விடுமுறை அளித்த் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
தமிழகத்தில் உள்ள 987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அரசு அனுமதி இன்றி தன்னிச்சையாக விடுமுறை விட்டது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில் 987 தனியார் பள்ளிகள் தரும் விளக்கத்திற்கு பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்