மேலும் கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் மாணவர்கள் பெற்றோர்களிடமிருந்து புகார் வராத வகையில் தனியார் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில் அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.