ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை குறித்த மோதல் நிலவி வரும் நிலையில், கடும் பரபரப்புகளுக்கு இடையே இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தவிர வேறு 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடியார் அணியினர் கோஷங்களை எழுப்பி வருவதால் 23 தீர்மானங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆம், பொதுக்குழு தீர்மானங்களை பொன்னையன் முன்மொழிவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 23 தீர்மானங்களையும் அதிமுக பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுக்குழு தீர்மானங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நிராகரித்து விட்டார்கள் என துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்ததோடு ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு இணைத்து அனைத்து தீர்மானங்களும் பின்னர் நிறைவேற்றப்படும் என கூறினார்.
ஆனால், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழு தொடர்பான 23 தீர்மானத்தை அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிய நான் வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார். இதனால் பொதுக்கூட்டத்தில் சலசலப்பு குறைந்து அமைதி ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.