ஜூலை 11ல் ஈபிஎஸ் பொதுச் செயலாளராவார்: பொள்ளாச்சி ஜெயராமன்

ஞாயிறு, 26 ஜூன் 2022 (12:59 IST)
ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆவார் என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுகவின் தலைமை பதவியான பொதுச் செயலாளர் பதவியை பிடிக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக உள்ளார் என்பதும் அதனை தடுக்க ஓ பன்னீர்செல்வம் சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அதிமுக பிரமுகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களிடம் பேசியபோது ஜூலை 11ம் தேதி நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் தான் உள்ளனர் என்றும் தெரிவித்தார் 
இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜூலை 11-ஆம் தேதி பொதுக்குழு நடைபெறாது என்று தெரிவித்து வருகின்றனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்