தெளிவா சொல்லுங்க; ஆஸ்பத்திரி போகணுமா? கூடாதா? – எடப்பாடியார் கோரிக்கை!

வியாழன், 13 ஜனவரி 2022 (14:31 IST)
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் மேற்கொள்ள வேண்டிய நெறிமுறைகளை அரசு புரியும்படி அளிக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழக அரசு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளதுடன், மக்கள் பின்பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பதிவாகும் கொரோனா பாதிப்புகளில் 75 சதவீதத்திற்கும் மேல் ஒமிக்ரான் பாதிப்புகளாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 இந்நிலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக அளிக்கப்படவில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் “கொரோனா, ஒமிக்ரான் பாதிப்பு உண்மை நிலவரத்தை அரசு வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மக்களை அச்சுறுத்தாமல் அதேசமயம் உண்மையை மறைக்காமல் சொல்ல வேண்டியது அரசின் பொறுப்பு. அதுபோல நோய்தொற்று உள்ளவர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமா? செல்ல வேண்டாமா? என்பது குறித்தும் சரியாக வழிகாட்ட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்