மதுரையை சேர்ந்த தமிழறிஞர், பேராசிரியர் மற்றும் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் நடுவர் சாலமன் பாப்பையா, மதுரை அரசரடி பகுதியில் உள்ள ஞானஒளிபுரத்தில் வசித்து வருகிறார். இவரது மனைவி ஜெயபாய், வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவரது உடலுக்கு அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், சாலமன் பாப்பையா மனைவி மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் "தமிழ் அறிஞரும் பிரபல பேச்சாளர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மனைவி திருமதி ஜெயபாய் அவர்கள் மறைந்து செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். உற்ற துணையான வாழ்விணைரை இழந்து தவிக்கும் சாலமன் பாப்பையா அவர்களுக்கு எனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.