தனது தொகுதியில் பேரனோடு சென்று வாக்களித்த எடப்பாடியார்!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (10:58 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் சிலுவம்பாளையம் பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கும் நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் எடப்பாடி தொகுதி சிலுவம்பாளையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து விட்டு வீட்டிலிருந்து குடும்பத்துடன் நடந்தே வந்த எடப்பாடி பழனிசாமி வாக்குச்சாவடியில் தனது பேரனை கையில் தூக்கிக் கொண்டு சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்