அதிமுக மாவட்ட செயலாளர்கள் உடன் ஈபிஎஸ் ஆலோசனை.. கூட்டணியில் யார் யார்?

Mahendran

செவ்வாய், 9 ஜனவரி 2024 (11:43 IST)
அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவதாகவும் பாராளுமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சியை கூட்டணியில் சேர்ப்பது என்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தான வியூகம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை எனையா ஏற்கனவே அதிமுக உறுதிபட கூறி இருக்கும் நிலையில் அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சியை சேர்ப்பது நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, தேமுதிக உள்பட ஒரு சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சி செய்யப்படுமா? அல்லது புதிய கூட்டணி அமைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்