அதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினின், அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்று சேர்ந்து பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் நாளை நேரில் சந்தித்த அழைப்பு விடுத்துள்ளார். இவர்களின் சந்திப்பு தலைமை செயலகத்தில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.