இதற்கிடையே திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுகவின் செயல்களை விமர்சித்து அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். எனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அறிக்கை நாயகன என பட்டப்பெயர் வைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, என்னைப் பற்றியே மு.க.ஸ்டாலின் தினந்தோறும் பேசிவருகிறார். அறிக்கைவிட்டு அறிக்கைவிட்டு அறிக்கை நாயகனாக உருவெடுத்துள்ளார். அரசின் மீது குறை சொல்லாமல் ஆக்கப்பூர்வமான முறையில் செயல்பட்டு எதிர்க்கட்சி வரிசையிலாவது ஸ்டாலின் அமர முயற்சி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.