அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கினால் மாணவர்களுக்கான 69% இடஒதுக்கீடு கேள்விக்குறியாகும். அதேபோல உயர் சிறப்பு அந்தஸ்து வந்தால் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு, கூடுதல் கல்விக்கட்டணம் வர வாய்ப்பு நேரிடும். எனவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்று டிவிட்டரில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக-வின் கடும் எதிர்ப்பு, #SaveAnnaUniversity போராட்டத்திற்குப் பிறகு, அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என அதிமுக அரசு அறிவித்துள்ளது. வெறும் அறிவிப்பு மட்டும் போதாது. மத்திய அரசிடம் கடிதம் வழியாகத் தெரிவிக்க வேண்டும். #DismissSurappa என தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.