சேலத்து யார்க்கர் புயலுக்கு ஸ்டாலின் வாழ்த்து!

செவ்வாய், 10 நவம்பர் 2020 (14:07 IST)
திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்றுடன் முடிவுக்கு வருகிறது என்பதும் இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன என்பதும் தெரிந்ததே. 
 
இந்நிலையில் ஹைதராபாத் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரும் யார்க்கர் மன்னனுமான நடராஜன், ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இதனையடுத்து அவருக்கு ஏற்கனவே வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் கிடைத்தது. 
 
இதனைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள சேலத்து யார்க்கர் புயல் நடராஜனுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்! நடராஜன் உடன் பேசினேன். அவர் உயர்வுகளைப் பெறவும், வெற்றிகள் குவித்து, அணிக்கு பெருமை சேர்க்கவும் எனது விருப்பங்களைத் தெரிவித்தேன். அனைத்துக் கனவுகளும் நிறைவேறட்டும் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்