தங்கமணி வீட்டில் கைப்பற்றிய பொருட்கள் என்னென்ன? லஞ்ச ஒழிப்புத்துறையினர் தகவல்!

திங்கள், 20 டிசம்பர் 2021 (21:47 IST)
முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி வீட்டில் கைப்பற்றப்பட்ட உள்ள பொருட்கள் என்னென்ன என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் தற்போது தெரிவித்துள்ளனர்
 
கடந்த 15ஆம் தேதி 70 இடங்களில் சோதனை செய்யப்பட்டது என்பதும் இன்று 16 இடங்களில் சோதனை செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தங்கமணி வீட்டில் நடந்த சோதனையில் என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர் 
 
பல வங்கிகளின் பெட்டக சாவிகள், லேப்டாப்புகள், ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இதனடிப்படையில் புலன் விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்