பேருந்து, மின் கட்டணங்கள் உயர்கிறதா? வெள்ளை அறிக்கையால் பரபரப்ப்பு

திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (13:04 IST)
தமிழகத்தில் மின்சார துறை மற்றும் போக்குவரத்து துறை ஆகிய இரண்டும் நஷ்டத்தில் இயங்கி வருவதாக வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் மின் கட்டணம் மற்றும் பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இன்று தமிழக நிதியமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை ஆகிய இரண்டும் இரண்டு லட்சம் கோடிக்கும் அதிகமாக கடன் உள்ளது என்றும் கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  
மேலும் ஒரு கிலோமீட்டர் பேருந்து இயக்கினால் 50 ரூபாய் நஷ்டம் அடைகிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்
 
வெள்ளை அறிக்கையில் போக்குவரத்து மற்றும் மின்துறை ஆகிய இரண்டு துறைகளும் நஷ்டத்தில் இயங்கி வருவதால் அந்த இரண்டு துறைகளில் மீட்க மின் கட்டணம் மற்றும் பேருந்து கட்டணம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்