நீலகிரிக்கு சுற்றுலா செல்வோரின் கவனத்திற்கு...

செவ்வாய், 13 ஜூலை 2021 (12:05 IST)
நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் இ-பதிவு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இதனால் சுற்றுலா தளங்கள் மூடப்பட்டதால் சுற்றுலா தளங்களை நம்பி தொழில் செய்யும் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. 
 
தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனிடையே, தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு இ-பாஸ் இல்லாமல் செல்லலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 
 
ஆனால், நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் இ-பதிவு, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் ஆகியவற்றை சரிபார்த்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்