ஓபிஎஸ் பதுக்குவது.. பாய்வதற்காகவா? – துரைமுருகன் சந்தேகம்!

புதன், 10 பிப்ரவரி 2021 (15:09 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சசிக்கலா விடுதலை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில் சசிக்கலா விடுதலை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிக்கலா விடுதலையால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர்கள் கூறி வரும் நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதுகுறித்து ஏதும் பேசாதததும் அரசியல் வட்டாரங்களில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள திமுக பொது செயலாளர் துரைமுருகன் “எங்கும் வராமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் ஒபிஎஸ்ஸிடம் ஏதோ திட்டம் இருக்கிறது. யார் தலைவர் என்பதே குழப்பமாக இருப்பதால் தேர்தல் வரும் வரை அதிமுக இருக்குமா என்பதே தெரியவில்லை” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்