கருப்பர் கூட்டத்திற்கும் எங்களுக்கும் நோ கனெக்‌ஷன்: துரைமுருகன்!

செவ்வாய், 21 ஜூலை 2020 (12:02 IST)
கறுப்பர் கூட்டத்துக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். 
 
கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் சமீபத்தில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறான விமர்சனம் செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகிகளான செந்தில் வாசன் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து இன்று மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
இந்த நிலையில் சமீபத்தில் சென்னை தி நகரில் உள்ள கருப்பர் கூட்டம் யூ-டியூப் அலுவலகத்தில் சோதனை செய்த சைபர் கிரைம் போலீசார் முக்கிய ஆதாரங்களை கைப்பற்றி சீல் வைத்தனர். 
 
அதோடு கருப்பர் கூட்டத்திற்கு திமுக அதரவு அளிப்பதாக வெளியான தகவலை திமுகவினர் மறுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கறுப்பர் கூட்டத்துக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதற்கான தேவையும் இல்லை என துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்