தேர்தல் நெருங்கும் வேளையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு, வருமான வரித்துறை அதிகாரிகளின் உதவியுடன் எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தி பழிவாங்கும் போக்கில் நடந்து வருவதாக அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தற்பொழுது துரைமுருகன் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் முடிவில் இரண்டு பைகளில் ஆவணங்களுடன் , ரூ.10 லட்சம் பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அதில் துரைமுருகன் ; எங்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தி மிரட்ட நினைக்கிறது பாஜக என்று அவர் கூறியதை குறிப்பிட்டும், அதற்குக் கீழே பதிலாக சந்தேக சாம்பிராணி : விஜயபாஸ்கர் வீட்டிலலேயும் , தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடந்தா தக்காளி சட்னி உங்க வீட்டுல ரெய்டு நடந்தா ரத்தமா என்றும் பதிவிட்டு இதைச் சாணக்கியா குறிப்பிடுவதாக ( அவரது அதிகாரபூர்வ சாணக்கியா பத்திரிக்கை ) குறிப்பிட்டுள்ளார்.