தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் தேதியை விரைவில் அறிவிக்க இருப்பதாக தலைமை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் அதிமுக, திமுக, தேமுதிக போன்ற முக்கிய கட்சிகள் ஏற்கனவே தேர்தலுக்காக விருப்ப மனுக்களை பெற துவங்கியுள்ள நிலையில், மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.