திமுகவின் தற்போதையை மூத்த தலைவர்களில் ஒருவராகவும் அக்கட்சியின் புதிய பொதுச் செயலாளராகவும் இருப்பவர் துரைமுருகன். இவர் கலைஞருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர். ஆனால் ஸ்டாலினோடு சில கருத்து மோதல்கள் எழுந்து பிறகு அவருக்குக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வழங்கிய பின்னர் சுமூகமாக அவர்களின் உறவு இருந்து வருகிறது.
இந்நிலையில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழுவை அமைக்க உள்ளது. வழக்கமாக அந்த குழுவில் எப்போதும் இருக்கும் துரைமுருகன் இந்த முறை இருக்க மாட்டார் என சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் அவர் கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பதால் அடுத்த கட்ட தலைவர்களுக்கு அந்த பொறுப்பை வழங்கலாம் என ஸ்டாலின் முடிவு செய்துள்ளதே என சொல்லப்படுகிறது.