மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை: மீன்வளத்துறை அறிவிப்பு

செவ்வாய், 31 ஜனவரி 2023 (09:54 IST)
மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக மீன்வளத் துறை சற்று முன் அறிவித்துள்ளது. 
 
வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடல் சீற்றமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக கடலூர் மாவட்டம் மீன்வளத்துறை அறிவித்துள்ளது.  இதன் காரணமாக கடலூர் வேதாரண்யம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என செய்திகள் வெளியாகி உள்ளது
 
மேலும் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன் தீவு பகுதியில் உள்ள மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்