போகி பண்டிகையால் சென்னையில் புகை மூட்டம்: விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் பரபரப்பு..!

Siva

ஞாயிறு, 14 ஜனவரி 2024 (07:44 IST)
போகிப் பண்டிகையின் புகைமூட்டம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில், விமான சேவை பாதிப்பு அடைந்துள்ளது. சிங்கப்பூர், லண்டன் விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியவில்லை என்பதால் அந்த விமானங்கள் ஹைதராபாத்துக்கு விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
 
மேலும் போகி கொண்டாட்டம்  காரணமாக சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தெரிகிறது. போகி பண்டிகையொட்டி சென்னை முழுவதும் பழைய பொருட்களை எரித்து கொண்டாட்டத்தை பொதுமக்கள் வெளிப்படுத்தி வருவதால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளது.
 
போகிப் பண்டிகை என்பது தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகையாகும். இது பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாள் கொண்டாடப்படுகிறது. போகி என்றால் "பழையதை விட்டுவிட்டு புதியதை ஏற்றுக்கொள்வது" என்று பொருள். இந்த நாளில் மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை எரித்துவிட்டு புதிய பொருட்களை வாங்குவார்கள்.
 
போகி பண்டிகை என்பது தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் குறிக்கும் ஒரு பண்டிகை ஆகும். இது வசந்தத்தின் வருகையையும் குறிக்கிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்