விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்களை முடித்த சூரி அடுத்து நடிக்கும் கருடன் படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்குகிறார்.. இந்த படத்துக்குக் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். இந்த படத்தில் சூரியுடன் முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளதாக சூரி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் 40 கோடி ரூபாய் என தகவல் பரவி, கோலிவுட்டை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. சூரி நடித்த விடுதலை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதையடுத்து அவரின் மார்க்கெட் இவ்வளவு உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.